[Untitled]‎ > ‎

05.03.17- இன்றைய ராசி பலன்..(05.03.2017)

posted Mar 4, 2017, 6:16 PM by Habithas Nadaraja



 
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அழகு, இளமைக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.






ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். 






மிதுனம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் போட்டி களை சமாளிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். 







கடகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள். 







சிம்மம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நெருங்கிய வர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.  








கன்னி: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணவரவு திருப்தி தரும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.






துலாம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். வேலைச்சுமை மிகுந்த நாள்.







விருச்சிகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. மனைவி வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.







தனுசு: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். 








மகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். 






கும்பம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உழைப்பால் உயரும் நாள்.







மீனம்:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

Comments