05.03.21- இன்றைய ராசி பலன்..(05.03.2021)

posted Mar 4, 2021, 7:37 PM by Habithas Nadaraja
 • மேஷம்:சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில்  சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து விலகும். சிக்கனம் தேவைப்படும் நாள். • ரிஷபம்:சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவரச் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

 • மிதுனம்: அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள். • கடகம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
 • சிம்மம்:எதிர்பார்த்தவைகளில் சிலதள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருக்கு அசதி சோர்வு வந்து நீங்கும். பழையகடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

 • கன்னி: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில்  உங்கள் கருத்திற்கு ஆதரவு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

 • துலாம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன் -மனைவிக்குள் இருந்தமனக்கசப்பு நீங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தி யாயம் தொடங்கும் நாள். • விருச்சிகம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். கணவன் -மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடிவிற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பகைத்து கொள்ளாதீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். • தனுசு: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன்எரிபொருள் இருக்கிறதா என பார்த்து கொள்ளுங்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. த்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். • மகரம்:எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.


 • கும்பம்:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உங்கள் உறவினர் நண்பர்களால் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள். • மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

Comments