05.04.17- இன்றைய ராசி பலன்..(05.04.2017)

posted Apr 4, 2017, 6:47 PM by Habithas Nadaraja



 
மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.






ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய் வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள்.







மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பண வரவு திருப்தி தரும். உறவினர்கள் மதிப்பார்கள். தடைப்பட்ட வேலை களை முடிப்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.







கடகம்:   ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோ கத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.






சிம்மம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக் கும். அரசு காரியங்கள் தாமதமாகும். சகோதர வகையில் மனவருத்தம் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.








கன்னி: ஆன்மிகப் பெரி யோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். நெருங்கியவர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்-. சிறப்பான நாள்.






துலாம்:உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள்வீர் கள். உறவினர், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப் பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.







விருச்சிகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உடல் நலம் சீராகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்







தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் மற்றவர் களை நம்பி பெரிய முடிவு கள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொள்ளுங்கள். கோபத் தால் இழப்புகள் ஏற்படும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.






மகரம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.







கும்பம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.







மீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறி வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

Comments