05.06.17- இன்றைய ராசி பலன்..(05.06.2017)

posted Jun 4, 2017, 6:43 PM by Habithas Nadaraja
 மேஷம்:  கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர் கள் மதிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோ கத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள். 

மிதுனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யாகத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.கடகம்: பழைய நல்ல சம்பவங் களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி யான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.சிம்மம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணை யாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.கன்னி: கடந்த இரண்டு நாட் களாக கணவன்-மனைவிக் குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். நிம்மதியான நாள்.துலாம்ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம் புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந் தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.விருச்சிகம்: சில வேலை களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர்கள், நண்பர் களுடன் மனத்தாங்கல் வரும். மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். வாகனம் பழுதாகும். உத்யோகத் தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.தனுசு: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரங்கள் பாசமழை பொழிவார்கள். உங்க ளால் வளர்ச்சியடைந்த சிலரை 
இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்று வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மகரம்: உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள்வீர் கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள்.  வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள். கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.மீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாரின் விருப்பங் களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத் தடிப்பார்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
Comments