05.06.18- இன்றைய ராசி பலன்..(05.06.2018)

posted Jun 4, 2018, 6:18 PM by Habithas Nadaraja
மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.   ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வி.ஐ.பிகளால் ஆதாயமடைவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.    மிதுனம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள். உற்சாகமான நாள்.   கடகம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டவை தாமதமாகி முடியும் நாள்.  சிம்மம்:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். திறமைகள் வெளிப்படும் நாள்.    கன்னி:பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள். துலாம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது நட்பு மலரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். கனவு நனவாகும் நாள்.  விருச்சிகம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள்.  உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.  
தனுசு: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். வெற்றி பெறும் நாள்.


மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். கும்பம்:ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஏமாற்றங்கள் வரக்கூடும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.  

                                        

மீனம்: எளிதில் முடிய வேண்டிய சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதி காரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்
Comments