05.07.18- இன்றைய ராசி பலன்..(05.07.2018)

posted Jul 4, 2018, 6:29 PM by Habithas Nadarajaமேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள்  இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வேற்றுமதத்தவரால் ஆதாயமடைவீர்கள்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரி முக்கிய அறிவுரை தருவார். சாதிக்கும் நாள். மிதுனம்:பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள். கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உங்க ளால் மற்றவர்கள் பயனடை வார்கள்.  வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தினரை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது  நல்லது. சிக்கனம் தேவைப்படும் நாள். கன்னி: உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் அமையும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். உங்களின் எண்ணங்கள்  பூர்த்தியாகும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.  தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.  துலாம்குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.  வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம்  கிட்டும் நாள். விருச்சிகம்:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பழையஉறவினர்கள் வீடு தேடிவருவார்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன்  நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள்  தருவீர்கள். கனவு நனவாகும் நாள். 


தனுசு:எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருக்கு அசதி, சோர்வு  வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். 


மகரம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். நாடி  வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். வெற்றி பெறும் நாள். கும்பம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சேமிக்க  வேண்டுமென்ற எண்ணம் வரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். அலுவலகத்தில் அமைதி  நிலவும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.   


                                        

மீனம்: ராசிக்குள் சந்திரன் அமர்ந்திருப்பதால் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து  நீங்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
Comments