[Untitled]‎ > ‎

05.07.21- இன்றைய ராசி பலன்..(05.07.2021)

posted Jul 4, 2021, 5:57 PM by Habithas Nadaraja
  • மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள் ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்டுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.








































  • ரிஷபம்:கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.



  • .




































  • மிதுனம்:ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.














































  • கடகம்:சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிறுவாகத்திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.







  • சிம்மம்:கணவன் – மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். நீண்ட நாட்களாக தள்ளி போன காரியங்கள்  இன்று  முடியும். வெளியூரில் இருந்துநல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.








  • கன்னி:சந்திராஷ்டமம் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து போகும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.


















































  • துலாம்:புதிய எண்ணங்கள் செயல்வடிவம் பெறும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


























  • .

























  • விருச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்று மதத்தவர் உதவுவார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சாதகமாக நடந்து கொள்வார்கள். அமோகமான நாள்.










  •  




























  • தனுசு: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும் நாள்.













































  • மகரம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.
















































  • கும்பம்:கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

    .


















































  • மீனம்:உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.00
Comments