05.09.16- இன்றைய ராசி பலன்..(05.09.2016)

posted Sep 4, 2016, 6:24 PM by Habithas Nadaraja
மேஷம்: சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 


ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டுவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். 


மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.  


கடகம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.


சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.


கன்னி: காலை 6.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் குடும்பத்தில் அமைதி நிலவும். தோற்றப் பொலிவுக் கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். மனசாட்சி படி செயல்படும் நாள்.  


துலாம்: காலை 6.45 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து விலகும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


விருச்சிகம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மோதல்கள் வேண்டாமே. உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


தனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். மனைவிவழியில் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதித்துக் காட்டும் நாள்.


கும்பம்: காலை 6.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துசெல்லும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். 


மீனம்: காலை 6.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
Comments