[Untitled]‎ > ‎

05.09.21- இன்றைய ராசி பலன்..(05.09.2021)

posted Sep 4, 2021, 8:25 PM by Habithas Nadaraja
  • மேஷம்:முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். புது வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.






























































  • ரிஷபம்:குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.தைரியம் கூடும் நாள்.





























  • .




































  • மிதுனம்: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனாக வாங்கிய பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். தடைகள் உடைபடும் நாள்.








































































  • கடகம்:  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். நீங்கள் எதைப் பேசினாலும் அதை எல்லோரும் தவறாக புரிந்து கொள்வார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.











  • சிம்மம்:கணவன்-மனைவிக்குள் விவாதம் வந்துபின் சமரசமடைந்து வந்து செல்லும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். யாருக்கும்சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.















  • கன்னி:குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டு அறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்.







































































  • துலாம்:தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.













































  • .

























  • விருச்சிகம்:கணவன்- மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயம் அடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உறவினர் நண்பர்களால் நன்மை உண்டு. தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

































  •  




























  • தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை நம்பி முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன்  வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.































































  • மகரம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்னணு மின்சார பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். தாய்வழி ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.





































































  • கும்பம்:சமயோசிதமாகவும் சதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் முக்கிய அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அமோகமான நாள்.











































































  • மீனம்:குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நட்பால் அன்புத் தொல்லை குறையும்.  வீண் செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். கனவு நனவாகும் நாள்.
Comments