மேஷம் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் வெற்றி கிட்டும் நாள். தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகமடைவீர்கள். சகோதர சச்சரவுகள் அகலும். எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். ரிஷபம் நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். வெளியூர் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பணவரவுகள் திருப்தியாக இருக்கும். மிதுனம் குதூகலம் கூடும் நாள். சிந்தித்துச் செய்த சில காரியங்களிலும் குளறுபடிகள் ஏற்படலாம். உடல் நலனில் அக்கறை காட்டும் சூழ்நிலை அமையும். பயணத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படும். கடகம் முட்டுக்கட்டைகள் அகன்று முன்னேற்றம் கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவது நல்லது. புதியவர்களின் நட்பு கிட்டும். இடமாற்றச் சிந்தனை உருவாகும். சிம்மம் கையில் காசு பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். ஆதாயம் தரும் வேலையன்றில் அக்கறை காட்டுவீர்கள். சந்தோஷமான அனுபவங்கள் மூலம் மனதில் உற்சாகம், தெம்பு அதிகரிக்கும். கன்னி தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். எதிர்கால முன்னேற்றத்திற்காக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. துலாம் சவால்களைச் சமாளிக்கும் நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். வெளியூர் பயணங்கள் செல்ல திட்டமிட்டு பின் அதை மாற்றம் செய்வீர்கள். பூமி பிரச்சினை தீரும். விருச்சகம் இறைவழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். எடுத்த காரியங்களை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். தனுசு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அதிக செலவில் முடிக்க நினைத்த வேலையன்றை குறைந்த செலவில் முடிப்பீர்கள். மகரம் ஆரோக்யம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் நாட்டம் செல்லும். சொந்த பந்தங்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் அகலும். கும்பம் கவுரவம், அந்தஸ்து உயரும் நாள். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மீனம் காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். தாய் வழியில் தக்க பலன் கிடைக்கும். வாகன பழுதுகளைச் சரிசெய்யும் எண்ணம் ஏற்படும். தொழில் ரீதியாக வர வேண்டிய பாக்கிகள் வந்து சேரலாம். ![]() |
கலாச்சாரம் >