[Untitled]‎ > ‎

05.12.19- இன்றைய ராசி பலன்..(05.12.2019)

posted Dec 4, 2019, 5:51 PM by Habithas Nadaraja


மேஷம்: எடுத்த காரியங்களை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.







ரிஷபம்:நண்பர்கள், உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். வீட்டிற்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.






மிதுனம்: கொடுத்த வாக்கை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த பந்தங்கள் சிலர் உங்கள் உதவியை கேட்டு வருவார்கள். உங்களால் வளர்ச்சி அடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதனை படைக்கும் நாள்.







கடகம்:கடந்த இரண்டு  நாட்களாக. குடும்பத்திலும் வெளியிலும் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். நீண்ட  பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும். தடைப்பட்ட காரியங்கள் முடியும் நாள்.







சிம்மம்:சந்திராஷ்டமம் தொடர்வதால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல், குழம்புவீர்கள்.  உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில், சக ஊழியர்களுடன், கருத்து வேறுபாடுகள், வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.







கன்னி:உங்களுடைய திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வாகன பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்களைத் தேடி புதிய பொறுப்புகள் வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.







துலாம்:நீண்ட, நாட்களாக வரவேண்டிய பணம்கைக்கு வந்து சேரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில், சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துப் புகழ் பெறுவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.






விருச்சிகம்:பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஆடம் பரமான செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிக ரிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த் தனை களை நிறைவேற்றுவீர்கள். கூட்டாளிகள் ஆதரவு கிடைக்கும்.உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். நன்மை நடக்கும் நாள்.







தனுசு:சின்ன, சின்ன பிரச்சினைகளையும் சுமுகமாகத் தீர்த்திட எண்ணி செயல்படுவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பணப்பற்றாக்குறை இரு ந்தாலும், சமாளிக்க கூடிய திறன் உங்களிடம் இருக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் பிரச்சினையை தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தடைகளை படிக்கற்கள் ஆக்கும் நாள்.






மகரம்:தீர்க்கமாக சிந்தித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பும் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சியால் லாபம் பெருகும். வெற்றி கிட்டும் நாள்.







கும்பம்:கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகும்.தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும்.  வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.






                                        
மீனம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால், எந்தக் காரியம் எடுத்தாலும், அலைச்சலும், போராட்டங்களும். இருக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கோபத்தால் பிரச்சினைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், மாற்றிக் கொள்வது நல்லது. நேர்மறை சிந்தனை தேவைப்படும் நாள்.
Comments