06.04.18- இன்றைய ராசி பலன்..(06.04.2018)

posted Apr 5, 2018, 6:34 PM by Habithas Nadaraja
மேஷம்:  நண்பகல் 12.52  மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும, அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.ரிஷபம்:குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நண்பகல் 12.52  மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள். மிதுனம்: பணப் புழக்கம் அதிகரிக்கும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமை களை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அமோகமான நாள்.கடகம்:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள். 


சிம்மம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.துலாம்:சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். உடல் நலம் சீராகும். நீண்ட நாள் பிரச்னைகள் தீரும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.விருச்சிகம்:நண்பகல் 12.52  மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். பணப்பற்றாக்குறையை சாளிப் பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.தனுசு:கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பகல் 12.52  மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.மகரம்:ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தின் ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிறப்பான நாள்.


கும்பம்:  சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


                                        

மீனம்:உங்கள் செயலில் வேகம் கூடும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். சாதித்துக் காட்டும் நாள்.
Comments