06.04.20- இன்றைய ராசி பலன்..(06.04.2020)

posted Apr 5, 2020, 6:24 PM by Habithas Nadaraja


மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்க னமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட் டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறை வேறும் நாள்.
ரிஷபம்: திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதுவேலை அமையும். வெளிவட்டாரத் தில் புது அனுபவம் உண்டாகும்.வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார் கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.மிதுனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து பிரச்சினை சுமூகமாகதீரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். வெற்றிபெறும் நாள்


கடகம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்தவேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.சிம்மம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண் டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும்.  வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சிந்தித்து செயல் படவேண்டிய நாள்.


கன்னி:குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த பந்தங்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.துலாம்:குடும்பத்தினர் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காகச் சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக்கொள்வீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.விருச்சிகம்:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் ஆதரிப்பார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.தனுசு:கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை சிந்தனை பிறக்கும். வியாபாரத்தில்  கூடுதல்லாபம் கிடைக்கும்.  உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.  திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும்,  நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர்கள் நண்பர்களுடன் நெருடல்கள் வந்துநீங்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் உயரதிகாரி குறை கூறுவார். கவனம் தேவைப்படும் நாள்.கும்பம்:பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலைஉயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


                                        
மீனம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மனதிற்குஇதமான செய்திகள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்கநினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர் கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.
Comments