06.06.20- இன்றைய ராசி பலன்..(06.06.2020)

posted Jun 5, 2020, 6:57 PM by Habithas Nadaraja


மேஷம்: வீட்டுத் தேவைகளை நிறைவேற்றி நிம்மதி அடைவீர்கள். பெண்களுக்கு ஆடம்பரச் செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கணவருக்கு நண்பர்களின் உதவியால் தொழிலில் லாபம் பெருகும்.


 
ரிஷபம்:உற்றார் உறவினர்களால் மனஅமைதி குறையக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்க கூடுதலாக உழைக்க வேண்டிவரும்.மிதுனம்:தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன் வாங்குவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாக பண விஷயத்தில் கவனம் தேவை. கடகம்:மனைவி வழி உறவினர்களிடமிருந்து எதிர்பாராத வகையில் உதவி கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு தொழில் ரீதியாக உள்ள நெருக்கடிகளைக் குறைத்து முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வெளிநாட்டு வேலை தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.சிம்மம்:ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு. சமயோசிதமாக பேசுவீர்கள்.கன்னி:
குடும்பத்தில் நடக்கும் சுபநிகழ்ச்சிக்கு உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரிகளுக்குப் பழைய கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் உங்களை நம்பி மேலதிகாரி பொறுப்புகளை ஒப்படைப்பார். சான்றோரின் ஆசியை பெறுவீர்கள்.துலாம்:சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். கலைஞர்கள் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்படுவது நல்லது. உடன்பணிபுரிபவர்களால் உருவான கவலைகள் விலகும். வியாபாரிகள் புது முயற்சியில் ஈடுபடுவர்.விருச்சிகம்: வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். திட்டமிட்ட செயல்கள் ஓரளவு தாமதமாக முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படலாம். கலைத்துறையினர் முன்செய்த தவறை எண்ணி வருந்த வேண்டி வரலாம்.தனுசு: தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்களை உங்களின் மனைவி சரிசெய்துவிடுவார். பணியாளர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேச வேண்டாம்.மகரம்:வாகனங்களில் நிதானத்துடன் செல்வது நல்லது. வியாபாரிகள் எதிர்மறையான கற்பனைகளை வளர்த்துக் கொண்டு கவலை கொள்ள வேண்டாம். பெண்கள் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவர். அலுவலகத்தில் பேச்சில் நிதானம் தேவை.கும்பம்: வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்காதீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். கலைஞர்கள் தொழில் போட்டியைச் சந்திக்க வேண்டிவரலாம். பெண்களின் எண்ணங்கள் நிறைவேறும்.


                                        
மீனம்:குடும்பத்தின் எதிர்கால நலனில் அதிக அக்கறை தேவை. உத்யோகத்தில் உங்களால் ஏற்பட்ட தவறுகளைத் தீர்க்க முன்வருவீர்கள் வியாபாரத்தில் பணவரவு திருப்தி தரும். நண்பர்களிடம் கடந்த கால அனுபவங்களை கூறி மகிழ்ச்சி கொள்வீர்கள்.
Comments