[Untitled]‎ > ‎

06.07.17- இன்றைய ராசி பலன்..(06.07.2017)

posted Jul 5, 2017, 7:07 PM by Habithas Nadaraja




 மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துபோவது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும்.உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.







ரிஷபம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.







மிதுனம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.







கடகம்:  புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். நினைத்தது நிறைவேறும் நாள்.







சிம்மம்:  நட்பு வட்டம் விரியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.







கன்னி: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.







துலாம்கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக்கூடும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. சகோதரர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.







விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். 







தனுசு: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துபோகும். உடன்பிறந்தவர்களால் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.







மகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். செல்வாக்குக் கூடும் நாள்.







கும்பம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.






                                        

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

Comments