06.08.17- இன்றைய ராசி பலன்..(06.08.2017)

posted Aug 5, 2017, 9:01 PM by Habithas Nadaraja
 மேஷம்:  உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம்:  காலை 7.48 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் வீண் டென்ஷன் வந்து போகும்.  பிற்பகல் முதல் குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். மகிழ்ச்சி தங்கும் நாள். 


மிதுனம்:  காலை 7.48 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சோர்வடைவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். 


கடகம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும்-. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதக மாக முடியும். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.கன்னி: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப் பீர்கள். வருமானம் உயரும். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.துலாம்எதிர்ப்புகள் அடங்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப் படும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.   தனுசு:  காலை 7.48 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதிலும் அவசரப் பட வேண்டாம். கணவன்- மனைவிக்குள் நிலவி வந்த மனப்போர் நீங்கும். இழுபறியாக இருந்த வேலை கள் முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்கள் ஒத்துழைப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.


மகரம்: காலை 7.48 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரு வித பட படப்பு வந்து செல்லும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். புது முதலீடு
களை தவிர்க்கவும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். போராட்டமான நாள்.


கும்பம்: அநாவசியச் செலவு களை குறைக்கப்பாருங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


                                        

மீனம்: திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக முடிப்பீர்கள். உடன்பிறந்தவர் களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
Comments