06.10.17- இன்றைய ராசி பலன்..(06.10.2017)

posted Oct 5, 2017, 7:32 PM by Habithas Nadaraja




மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேச வேண் டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபா ரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் வீண் விவாதம் வந்து போகும். போராடி வெல்லும் நாள்.







ரிஷபம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப் பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக் கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் திறமை கள் வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள். 







மிதுனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள். 







கடகம்:உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவு பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படு வீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு 
கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.  





சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சந்தேகப்படு வதை முதலில் நிறுத்துங் கள். உதவிக் கேட்டு உறவினர் களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.  







கன்னி:  பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல் படுவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். நன்மை கிட்டும் நாள். 







துலாம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர் கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வாகன வசதி பெருகும். வியாபா ரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அமோகமான நாள். 







விருச்சிகம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். 







தனுசு:உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபா ரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 







மகரம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும்.உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப் பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய் வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். வெற்றி பெறும் நாள். 







கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர் பாராத உதவிகள் கிட்டும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.   






                                        

மீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள். 
Comments