[Untitled]‎ > ‎

06.10.20- இன்றைய ராசி பலன்..(06.10.2020)

posted Oct 5, 2020, 6:47 PM by Habithas Nadaraja


மேஷம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த காரியத்தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.







 
ரிஷபம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.







மிதுனம்:சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் குறையும். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.








கடகம்:வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி முக்கிய அறிவுரை  தருவார்கள். இனிமையான நாள்.







சிம்மம்:பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.








கன்னி:
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நன்மைகள் நடைபெறும் நாள்.







துலாம்:சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். தர்மசங்கடமான சூழல்களில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் உருவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறி கொண்டிருக்க வேண்டாம். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.







விருச்சிகம்:சவாலாக தெரிந்த சில வேலைகள் சாதாரணமாக முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் முயற்சிகள் பலிதமாகும் . எண்ணங்கள் நிறைவேறும் நாள்.








தனுசு:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.








மகரம்:பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.








கும்பம்:அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்துபோகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகளைத் தாண்டி வெல்லும் நாள்.







                                        
மீனம்:உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மொத்தத்தில் முயற்சிகள் யாவும் பலிதமாகும் நாள்.
Comments