06.11.18- இன்றைய ராசி பலன்..(06.11.2018)

posted Nov 5, 2018, 7:06 PM by Habithas Nadaraja
மேஷம்: உங்கள் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி  மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு,சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி உண்டு. அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள். மிதுனம்:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துசேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.  கடகம்:  எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். தாயாருடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டா கும். உழைப்பால் உயரும் நாள்.சிம்மம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பயணங்கள் திருப்திகரமாகஅமையும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர் கள். உத்யோகத்தில் சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள். கன்னி: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரம், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மகிழ்ச்சியான நாள். துலாம்:காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். சிலவிஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். போராட்டமான நாள். 


விருச்சிகம்:எதிர்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட் களை கவனமாக கையாளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள். தனுசு:எதையும் சமாளிக் கும் மனோபலம் கிடைக்கும். சகோதரங்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக்கொள்வார்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சாதிக்கும் நாள். மகரம்:உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள். கும்பம்:காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சோர்வடைவீர்கள். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். தடைகள் நீங்கும் நாள்.  


                                        
மீனம்:காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள்  தலைத்தூக்கும். உதவிசெய்வதாக வாக்குக்கொடுத்தவர்கள்சிலர் இழுத்தடிப்பார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் புதுமுதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

Comments