![]() மேஷம்:தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கி யவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிந்தனைத்திறன் பெருகும் நாள். ரிஷபம்:உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிக் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களின் வேலையை பகிர்ந்துகொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். உத்தியோகத் தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள். மிதுனம்:கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். நல்ல மாற்றம் ஏற்படும் நாள். கடகம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் முயற்சிகளில் தடங்கல் ஏற்படும். மனதில் குழப்பமும், தாழ்வு மனப்பான்மையும் தலைதூக்கும் என்பதால் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள். சிம்மம்:குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உற்சா கமான நாள். கன்னி:எதிர்பார்ப்புகள் நிறை வேறும். வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும். எதிர்பாரத தனவரவு உண்டு. நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புதிய யுக்தியால் சாமர்த்தியம் பெருகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் வந்து சேரும். வெற்றி பெறும் நாள். துலாம்:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடை யும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழல் நிலவும். மகிழ்ச்சிகரமான நாள். விருச்சிகம்:எதிர்ப்புக்களை தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.வியாபாரத்தில் உங்கள் ஆளுமை குறையும். புதியவாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். முயற்சியால் முன்னேறக்கூடிய நாள். தனுசு:அரசால், ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உற்சாகமுடன் செயலாற்றும் நாள். மகரம்: கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனேமுடியும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். இன்பம் கிடைக்கும் நாள். கும்பம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்லுங்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவைப்படும் நாள். ![]() |
கலாச்சாரம் >