06.12.17- இன்றைய ராசி பலன்..(06.12.2017)

posted Dec 5, 2017, 5:34 PM by Habithas Nadaraja   [ updated Dec 5, 2017, 5:34 PM ]




மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.







ரிஷபம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.







மிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.





கடகம்:மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரியால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.







சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சிறப்பான நாள். 





கன்னி:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.







துலாம்:உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். 







விருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.







தனுசு:பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நன்மை கிட்டும் நாள்.







மகரம்:குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.






கும்பம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.






                                        

மீனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலைக் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
Comments