[Untitled]‎ > ‎

07.02.20- இன்றைய ராசி பலன்..(07.02.2020)

posted Feb 6, 2020, 5:32 PM by Habithas Nadaraja


மேஷம்:புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்க ளுக்கு நெருக்கமாவார்கள். வியாபாரத்தில் புதியமுயற்சிகள் வெற்றியடையும். வெற்றிக்கு வித்தி டும் நாள்.








ரிஷபம்:குடும்பத்தில் குதூகல மான சூழ்நிலை உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகள்முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் உதவிகரமாக இருப் பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கை யைப் பெறுவீர்கள். மகிழ்ச்சி தங்கும் நாள்.






மிதுனம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாதபயம் கவலை வந்து போகும். கணவன்-மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். வியாபாரத் தில் வேலையாட்களால் விரயம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.பொறுமைத் தேவைப்படும் நாள்.






கடகம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீர் கள். உறவினர்கள் நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சனை கள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.







சிம்மம்:எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிபெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்புமரியாதை உயரும். அதிகாரப் பதவியில் இருப் பவர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். சிறப்பான நாள்.






கன்னி:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் நல்ல இமேஜ் உண் டாகும். வியாபாரத்தில் முன்னிலை பெறுவீர்கள். உதவிகள் கிட்டும் நாள்.







துலாம்:குடும்பத்தில் இருந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். புதிய பொருள்களை வாங்குவீர்கள். உத்தி யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு கிடைக் கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.







விருச்சிகம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுடன் மனஸ்தாபங்கள்வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.







தனுசு: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.







மகரம்:குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். அரசால் அனுகூலம் உண்டு.வழக்குவிஷயங்கள் சாதகமாக முடியும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் திறமைய கண்டு வியப்பார்கள். மாற்றங்கள் நிறைந்த நாள்.







கும்பம்: புதிய திட்டங்களை தீட்டு வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயமுண்டு. அக்கம் -பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தி யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.புதுமை படைக்கும் நாள்.






                                        
மீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

Comments