posted Feb 6, 2021, 7:21 PM by Habithas Nadaraja
 தனுசு:கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
 மகரம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.
 கும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
 மீனம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
|
|