07.03.18- இன்றைய ராசி பலன்..(07.03.2018)

posted Mar 6, 2018, 5:25 PM by Habithas Nadaraja
மேஷம்:கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புது நட்பு மலரும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 6.55 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.ரிஷபம்:இன்றையதினம் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும்.கடன் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.வியாபாரத்தில் பழைய பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். திறமைகள் வெளிப்படும் நாள்.மிதுனம்: செயலில் வேகத்தை காட்டுவீர்கள்.வியாபார ரீதியாக சில பிரபலங்களை சந்திப்பீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் கூடும்.கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


கடகம்:முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.கன்னிப்பெண்களுக்கு பெற்றொரின் ஆதரவு கிட்டும்.மாணவர்கள் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.கனவு நனவாகும் நாள்.சிம்மம்:தன்னம்பிக்கை துளிர்விடும்.தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள்.வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு. தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும்.உத்யோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள். கன்னி:இன்றையதினம் திறம்பட செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.வியாபாத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள்.அரசு விஷயங்களில் அனுகூலமான நிலைக்காணப்படும். வெளிவட்டாரதொடர்பு அதிகரிக்கும். முன்கோபம்,வீண் டென்ஷன் விலகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.துலாம்: மாலை 6.55 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைசுமை குறையும். மாலை பொழுதிலிருந்து தடைகள் நீங்கும். மகிழ்ச்சியான நாள். விருச்சிகம்:குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாலை 6.55 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானித்து செயல்படப்பாருங்கள். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.தனுசு:இன்றையதினம் நம்பிக்கைக்குறியவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரி, சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.மகரம்: புதுமுயற்சிகள் வெற்றியடையும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும்.தலைச்சுற்றல், வயிற்றுவலி விலகும்.கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள் .பணவரவு உண்டு. மதிப்புக் கூடும் நாள்.கும்பம்:எதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைப்பட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவ, மாணவிகளின் நினைவுத்திறன் பெறுகும். சாதிக்கும் நாள்.


                                        

மீனம்: மாலை 6.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களை பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. புத்துணர்ச்சி பெருகும் நாள்
Comments