[Untitled]‎ > ‎

07.03.20- இன்றைய ராசி பலன்..(07.03.2020)

posted Mar 6, 2020, 6:11 PM by Habithas Nadaraja


மேஷம்:கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். திடீர் பயணம் உண்டாகும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத் தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில்  சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.







ரிஷபம்:சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த - பந்தங்கள் தேடி வந்து பேசுவார் கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத் தில் உங்களின் உழைப்பிற்குப் பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள் .






மிதுனம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால்நன்மை உண்டு. நம்பிக்கைக்குரிய வர்கள் சிலர் உதவுவார்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதிய பாதை தெரியும்  நாள்.







கடகம்:இன்று ராசிக்குள் சந்திரன்இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப் பான்மை தலைதூக்கும். உறவினர்கள் நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக் கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களால் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.






சிம்மம்:கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துகொள்ளாதீர்கள். வாகனம் தொந்த ரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம்  வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.







கன்னி: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பழையகடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும் . எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி  வருவார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகளை ஏற்பீர்கள். பெருமை உண்டாகும்  நாள்.







துலாம்:ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பிவருவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத் தில் உங்க ளின் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.







விருச்சிகம்:உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பிபெரிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத் தில் உயரதிகாரிகளிடம் மரியாதை கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.







தனுசு:சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங் கள் நினைவுக்கு வரும். புதியவர் களை நம்பி ஏமாற வேண்டாம். சகோதர வகையில்  அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத் தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.







மகரம்:கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.







கும்பம்:சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும்.உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.லாபம் பெருகும்நாள்.






                                        
மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை  தெரிந்து கொள்வீர் கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.
Comments