posted Mar 6, 2021, 5:59 PM by Habithas Nadaraja
 தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து கொள்வது நல்லது. உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார் தான். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
 மகரம்:வெளிவட்டாரத்தில் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் சிலர் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.
 கும்பம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.
 மீனம்:சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையைமாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.
|
|