[Untitled]‎ > ‎

07.06.20- இன்றைய ராசி பலன்..(07.06.2020)

posted Jun 6, 2020, 11:56 PM by Habithas Nadaraja


மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில்  பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தெய்வ அனுபவம் பெறும் நாள்.






 
ரிஷபம்:சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். அனாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.






மிதுனம்:தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.







 கடகம்:கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில்  சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். அமோகமான நாள்.







சிம்மம்:புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில்  திருப்தி உண்டாகும். புதுமை படைக்கும் நாள்.







கன்னி:
எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில்  சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.







துலாம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வுகிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள்.






விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகும்,இளமையும் கூடும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.







தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான பல வேலைகளை பார்க்க வேண்டி வரும். எந்த விஷயத்திலும் விழிப்புடன் செயல்படுங்கள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில்  திருப்தி உண்டாகும். பொறுமை தேவைப்படும் நாள்.







மகரம்:கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள் மற்றும் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில்  மறைமுக  எதிர்ப்புகள்  வந்து  செல்லும். போராடி வெல்லும் நாள்.






கும்பம்:ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சிகள் பலிதமாகும். புகழ் கௌரவம் கூடும் நாள்.






                                        
மீனம்:சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்தஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். காரிய சாதனை புரியும் நாள்.
Comments