07.07.17- இன்றைய ராசி பலன்..(07.07.2017)

posted Jul 6, 2017, 6:43 PM by Habithas Nadaraja
 மேஷம்: மதியம் 1.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். மாலைப் பொழுதி லிருந்து நிம்மதி கிட்டும் நாள்.ரிஷபம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 1.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.மிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பிரபலங்கள் அறி முகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையா ளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.கடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.கன்னி: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் வீடு, மனை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெற்றிக்கு வித்திடும் நாள்.துலாம்குடும்பத்தில் கல கலப்பான சூழல் உருவாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.விருச்சிகம்: மதியம் 1.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.


தனுசு:குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். உணவில்காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் அலைச்சல் உண்டு. உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 1.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.மகரம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிறப்பான நாள்.கும்பம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். கல்யாண முயற்சி பலிதமாகும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதித்துக் காட்டும் நாள்.


                                        

மீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். உற்சாகமான நாள்.

Comments