07.09.16- இன்றைய ராசி பலன்..(07.09.2016)

posted Sep 6, 2016, 6:29 PM by Habithas Nadaraja   [ updated Sep 6, 2016, 6:30 PM ]
மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். தாயார்  ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வபோது டென்ஷனாவீர்கள். மாலை 6.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்  குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள். 


ரிஷபம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். நெடு நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.  எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள்.  அமோகமான நாள். 


மிதுனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள்.  நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள்  அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். 


கடகம்: எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனா லும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பயணங்களால் பயனடைவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.  வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். 


சிம்மம்: தைரியமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை  வாங்கித் தருவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். சிறப்பான  நாள். 


கன்னி: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள்  வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாகன பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத் யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு  பாராட் டுக் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.  


துலாம்:  இரவு 6.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். திட்ட மிடாத  செலவுகளும், பயணங்களும் குறுக்கிட் டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப் பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரி மையை  பெறுவீர்கள். மாலைப் பொழுதி லிருந்து தடைகள் உடைபடும் நாள். 


விருச்சிகம்: குடும்பத்தின ருடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காக வும் ஜாமீன், கேரண்டர் கையெ ழுத்திட வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும்.  உத்யோ கத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். இரவு 6.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முன்யோ சனையுடன் செயல்பட வேண்டிய  நாள்.  


தனுசு: திட்டமிட்ட காரியங் கள் கைக்கூடும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமு கமாவார்கள்.  வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். இனிமையான  நாள்.  



மகரம்:  தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். சகோதரங்களின் பாசப்பி ணைப்பு அதிகரிக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாட்களாக  பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன்  பெருகும் நாள்.  


கும்பம்: சின்ன சின்ன சந்தர் ப்பங்களையும், வாய்ப் புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பழைய உற வினர், நண்பர்கள் தேடி வந்துபேசுவார்கள். வியாபாரத்தில்  வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக் கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். 




Comments