07.10.18- இன்றைய ராசி பலன்..(07.10.2018)

posted Oct 6, 2018, 7:26 PM by Habithas Nadarajaமேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். விருந்தினர்களின் வருகை உண்டு.வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.ரிஷபம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்துப் போகும். புது வேலைக்கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். தொழிலில் லாபம்கிடைக்கும்.  உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. உழைப்பால் உயரும் நாள். மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள்.  சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். வாகன வசதிப் பெருகும்.வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கை யாளர்களாவார்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள். கடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண் டாகும். தோற்றப் பொலிவுக் கூடும். புதியவரின்நட்பால் உற்சாகமடைவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள். 


சிம்மம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். முன்கோபத்தை குறையுங்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோ கத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். 


கன்னி: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமாக கிடைக்கும். உறவினர் பகை வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக் கப்பாருங்கள். உத்யோகத்தில் வேலைச் சுமையால் சோர்வடைவீர்கள். போராடி வெல்லும் நாள்துலாம்:  திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ் தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இனிமையான நாள்.விருச்சிகம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப் போது நினைத்து மகிழ்வீர்கள் மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன் னேறும் நாள்.தனுசு:குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். திடீர் திருப் பங்கள் நிறைந்த நாள். மகரம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். பண விஷயங்களில் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேடியிருக்கும். முன் கோபத் தை தவிர்க்க வேண்டிய நாள். 


கும்பம்:பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.பணப்புழக்கம் கணிசமாக உயரும். வாகனத்தை  சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவல கத்தில் மரியாதைக் கூடும். நன்மை கிட்டும்நாள்.


                                        
மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு.உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத் துவம் தருவார்கள். அமோகமான நாள்.  
Comments