07.12.19- இன்றைய ராசி பலன்..(07.12.2019)

posted Dec 6, 2019, 7:45 PM by Habithas Nadaraja


மேஷம்: கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். மற்றவர்களை நம்பி சாட்சி கையெழுத்திட வேண்டாம். தேவை யற்ற வீண் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரம் சுமாராக  இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீண் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும் நாள்.


ரிஷபம்:குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். உறவுகளால் ஆதாயம் உண்டு. மற்றவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.மிதுனம்:  எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள்  உங்கள்  வேலையைப் பகிர்ந்து கொள்வார்கள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் வெற்றி அடையும் உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். இனிமையான நாள்.கடகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். மற்றவர்களால் உங் களுக்கு ஆதாயம் உண்டாகும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந் தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். நல்ல மாற்றங்கள் நிறைந்த நாள்.சிம்மம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படுவதை விட்டு அறிவு பூர்வமாக செயல் படுவது நல்லது. உங்கள் பலம், பலவீனத்தை அறிந்து செயல்படுவது, உங்களுக்கு சாதகமான பலனைத் தரும். வியாபாரம் மந்தமாக இருக்கும்.பொறுமை தேவைப்படும் நாள்.கன்னி:குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். மனைவி வழியில் ஆதரவு உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வீட்டின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். நன்மை நடக்கும் நாள்.
துலாம்:உங்கள் பேச்சால் அனைவரையும், வசீகரிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை, மற்றவரிடம் சொல்லி மகிழ்வீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒரு உறவைச் சந்திப்பீர்கள்.உத்தியோகத்தில் சவாலான விஷயங்களை சாதாரணமாக முடித்துப் புகழ் பெறுவீர்கள். அமோகமான நாள்.


விருச்சிகம்:உங்கள் வருங்காலத்திற்கு தேவைகளை யோசித்து அதன்படி செயல்படுவீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். பழைய கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள்.


தனுசு:சின்ன சின்ன எதிர்ப்புக்களையும், தடைகளையும் தாண்டிமுன்னேறுவீர்கள். வீடு , வாகனப்பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் உங்கள் பணிகளை முடிக்கப் போராடவேண்டி இருக்கும். போராடி வெற்றி பெறும் நாள்.மகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு உரிய அங்கிகாரம் கிடைக்கும்.கும்பம்:குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையும், மகிழ்ச்சியும் ஏற்படும். பழைய பிரச்சினையை, சுமுகமாக தீர்க்க வழிகளைக் காண்பீர்கள். புனிதஆலயங்களைத் தரிசிப்பீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். நிம்மதி கிட்டும் நாள்.


                                        
மீனம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால், சாதாரணமாக முடிக்க வேண்டிய வேலைகளைக் கூட, போராடி முடிக்க வேண்டி இருக்கும். உங்களின் சிந்தனையை பண்படுத்திக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் பெறப் போராடுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். பக்குவமாகச் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
Comments