08.01.17- இன்றைய ராசி பலன்..(08.01.2017)

posted Jan 7, 2017, 7:36 PM by Habithas Nadaraja



 

மேஷம்: மதியம் மணி 3.00 வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.





ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். மதியம் மணி 3.00 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.







மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். மதிப்புக் கூடும் நாள்.







கடகம்:  நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்களால் ஆதாய மடைவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.







சிம்மம்:  குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு நீங்கள் சென்று வருவீர்கள். உங்கள் நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப் பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.









கன்னி:  மதியம் 3.00 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்ப தால் எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உங்கள் பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.





துலாம்பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. மதியம் 3.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.








விருச்சிகம்: யதார்த்தமாக பேசி மற்றவரை கவர்வீர்கள். நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை நீங்கள் உணர்வீர்கள். அரசால் உங்களுக்கு அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.







தனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். கனவு நனவாகும் நாள்.

 






மகரம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.





கும்பம்: தைரியமாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.







மீனம்: குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

Comments