08.02.20- இன்றைய ராசி பலன்..(08.02.2020)

posted Feb 7, 2020, 9:01 PM by Habithas Nadaraja


மேஷம்:எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நண்பர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.
ரிஷபம்:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகள் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். முயற்சியால் முன்னேறும் நாள்.


மிதுனம்:குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழையபிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். நிம்மதிகிட்டும் நாள்.கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். உங்கள் அணுமுறையை மாற்றுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஈட்ட போராடவேண்டியிருக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.


சிம்மம்:கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.கன்னி:குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கும். புகழ் கூடும் நாள்.துலாம்:உங்கள் செயலில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதுதொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.விருச்சிகம்:  புதிய பாதையில் பயணிக்கத்தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வெளியூர்
பயணங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். மாற்றங்கள் நிறைந்த நாள்.தனுசு:சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுத்து செயல்படுங்கள். முன்கோபத்தை குறையுங்கள். உங்களுடைய பலம் பலவீனம் அறிந்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.


மகரம்:குடும்பத்தாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவியின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வீட்டிற்கு தேவையான வசதியை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். நல்லன நடக்கும் நாள்.கும்பம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். அமோகமான நாள்.


                                        
மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக்  கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பழைய கடன்பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
Comments