posted Mar 7, 2021, 5:14 PM by Habithas Nadaraja
 தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள் வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.
 மகரம்:விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிக்க வேண்டிவரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
 கும்பம்: அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டு பேசுவார்கள். மதிப்பு கூடும் நாள்.
 மீனம்:கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.
|
|