posted Apr 7, 2021, 6:33 PM by Habithas Nadaraja
 தனுசு:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர் வருகையால் வீடு, களைக்கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியமான முடிவுகளை எடுக்கும் நாள்.
 மகரம்: இதுவரை இருந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கி இனிமேல் இனிதாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
 கும்பம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.
 மீனம்: எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
|
|