08.05.19- இன்றைய ராசி பலன்..(08.05.2019)

posted May 7, 2019, 6:23 PM by Habithas Nadaraja


மேஷம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.
ரிஷபம்:கடந்த இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.


மிதுனம்:ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில்வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.கடகம்:திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத் தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில்  வேலைச்சுமையால் சோர்வடை வீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.சிம்மம்:குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். சபைகளில் மதிக்கப்படு வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். சிறப்பான நாள்.கன்னி:புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப் புணர்ந்து செயல்படுவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.துலாம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம், வீண் டென்ஷன் விலகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.விருச்சிகம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மனஉளைச்சலை ஏற்படுத்துவார்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.தனுசு:உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடை வீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.மகரம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நாடி வந்தவர் களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்கும்பம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். புதுமை படைக்கும் நாள்.


                                        
மீனம்:எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
Comments