08.06.17- இன்றைய ராசி பலன்..(08.06.2017)

posted Jun 7, 2017, 7:13 PM by Habithas Nadaraja
 மேஷம்:  சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பண விஷயத்தில் கறாராக இருங்கள். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வரக்கூடும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.ரிஷபம்:  உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள். மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுக்கு சில ஆலோசனை வழங்கு வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத் தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.   கடகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.    சிம்மம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவி யால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். கன்னி: திட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவா ர்கள். அரசால் ஆதாயம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். வெற்றி பெறும் நாள். துலாம்கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங் கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.    விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அநாவ சியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. சிலரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.  தனுசு: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்
கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். தடைகள் தாண்டி முன்னேறும் நாள். மகரம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங் கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள். கும்பம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர் வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளை களின் பொறுப்புணர்வு அதிகமாகும். பணவரவு உண்டு. தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.   மீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதி காரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

Comments