08.06.20- இன்றைய ராசி பலன்..(08.06.2020)

posted Jun 7, 2020, 6:53 PM by Habithas Nadaraja


மேஷம்: கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. சண்டை போட்டு விலகியிருந்த நண்பர்கள் வலிய வந்து உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூடுதலாக உழைத்தால் நல்ல லாபத்தை பார்க்கலாம்.


 
ரிஷபம்:விரக்தி மனப்பான்மை மாறி சந்தோஷம் அதிகரிக்கும். உறவினர்கள் உதவி கேட்டு நீங்கள் செய்ய முடியாததால் தர்மசங்கடத்திற்கு ஆளாவீர்கள். அலுவலகத்தில் சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டி மேலதிகாரியிடம் நன்மதிப்பை பெறுவீர்கள்.மிதுனம்:ஆன்மிக விஷயங்களில் மனம் செல்லும். வியாபாரத்தில் சில அதிரடியான திட்டங்களை செயல்படுத்தி போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் மனதிருப்தியுடன் செயலாற்றுவர். கடகம்:வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் லாபம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் கொடுத்த வாக்கை நிறைவேற்றி மற்றவர்களிடம் பாராட்டைப் பெறுவீர்கள். பெண்கள் விரும்பியது நிறைவேறுவதால் மகிழ்ச்சி அடைவர்.சிம்மம்:பிரச்னைகளை புறந்தள்ளி மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். கணவன், மனைவி இடையே பண விஷயத்தில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரிகள் புதிய இனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். பெண்களுக்கு ஆடம்பர செலவுகளால் சேமிப்பு கரையும்.கன்னி:
வியாபாரத்தில் கடன் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு வீட்டில் வேலைப்பளு கூடுதலாக இருக்கும். புதிய நண்பர்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம்.துலாம்:பண விஷயத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. உங்களின் விடாமுயற்சியால் குடும்பத்தில் இருந்த நீண்டநாள் பிரச்னை மறைந்து ஒற்றுமை பிறக்கும். அலுவலகத்தில் புது நட்பு மலரும். பெண்கள் மனசாட்சிபடி செயல்பட்டு நிம்மதி காண்பர்.விருச்சிகம்: நீண்ட நாளாக தள்ளிப்போன செயல்கள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். பெண்கள் எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயலாற்றுவது நல்லது.தனுசு:கலைஞர்கள் எதையும் சமாளிக்கும் பயிற்சியை பெறுவர். மாணவர்களுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் நீங்கள் தேடிக்கொண்டிருந்த முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பெண்களுக்குப் பண விவகாரங்களில் பிரச்னைகள் தீரும்.மகரம்:குடும்பத்தில் பெண்களின் கை ஓங்கும். வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உத்யோகத்தில் உடனிருப்பவர்களால் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். மனதிற்கு பிடித்தமானவர்களைச் சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.கும்பம்:நீங்கள் மதிக்கும் பிரபலத்தின் சந்திப்பு கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். கலைஞர்கள் இலக்கை நோக்கி முன்னேறுவர். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெண்கள் சேமிப்பு பணத்தை செலவழிப்பர்.


                                        
மீனம்:உறவினர், நண்பர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். எதிர்வரும் சவால்கள் அனைத்தையும் முறியடிப்பீர்கள். கணவரின் நீண்டகால பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
Comments