[Untitled]‎ > ‎

08.08.20- இன்றைய ராசி பலன்..(08.08.2020)

posted Aug 7, 2020, 6:49 PM by Habithas Nadaraja


மேஷம்:திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.






 
ரிஷபம்:எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள் . தேவைகள் பூர்த்தியாகும் நாள் .








மிதுனம்:சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள் நண் பர்கள் உங்களை கலந்தா லோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.








 கடகம்:குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அறை குறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.








சிம்மம்:சந்திராஷ்டமம் இருப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.








கன்னி:
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்தி ரங்களை கற்று கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.  திறமைகள் வெளிப்படும் நாள்.








துலாம்:எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் நீங்கள்  ஆசிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.







விருச்சிகம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.  அக்கம் - பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லைகுறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபா ரத்தில் பழையவேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோ கத்தில்  சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.








தனுசு:பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டார தொடர் புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலைக்கு முயற்சி பலித மாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்க ப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.








மகரம்:குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப்பெருகும். வியாபாரத்தில் பற்று  வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாள்.








கும்பம்:கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகம் பொலிவு கூடும். வரவேண் டிய பணம் வந்து சேரும். புதியவர் கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபா ரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்தியோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.






                                        
மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்தது எல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கி கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
Comments