08.10.17- இன்றைய ராசி பலன்..(08.10.2017)

posted Oct 7, 2017, 6:56 PM by Habithas Nadaraja
 மேஷம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந் தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். பரணி நட்சத்திரக்காரர்கள் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை குறை
யும். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.      

ரிஷபம்:அநாவசிய செலவு களை குறைக்கப்பாருங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். உடல் நலத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் வேலையாட் களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.     மிதுனம்:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விருந்தினர் களின் வருகையால் வீடு களைக்கட்டும். சிலர் உங் கள் உதவியை நாடுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். பெருந் தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். கடகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர சலுகைகளை அறிவிப் பீர்கள். மதிப்புக் கூடும் நாள். 


சிம்மம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
 கன்னி:  சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியா மலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.  துலாம்:கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவா தங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.விருச்சிகம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.   தனுசு: பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். மனைவியின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவர்.மகரம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த வைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியா பாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாப மடைவீர்கள். நன்மை கிட்டும் நாள். கும்பம்:கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உங்களால் மற்றவர்களால் ஆதாயமடைவார்கள். வியாபாரத் தில் சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். செல்வாக்குக் கூடும் நாள்.


                                        

மீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
Comments