[Untitled]‎ > ‎

08.11.20- இன்றைய ராசி பலன்..(08.11.2020)

posted Nov 7, 2020, 6:20 PM by Habithas Nadaraja



மேஷம்:எதிர்ப்புகளைத் தாண்டிமுன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வீட்டை விரிவுபடுத்துவது குறித்துயோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரைசேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.







 
ரிஷபம்:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.








மிதுனம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கேட்டஇடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.








கடகம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும்.நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள்.  வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.







சிம்மம்:குடும்பத்தினருடன் வீண்விவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர் நண்பர்களிடம் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.








கன்னி:
குடும்பத்தில்  ஒற்றுமை  பிறக்கும். எதார்த்தமாக பேசி கவர்வீர்கள்.பூர்வீக சொத்துப் பிரச்சினை ஒன்று தீரும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நல்லன நடக்கும் நாள்.








துலாம்:தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.








விருச்சிகம்:குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள்.








தனுசு:சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.








மகரம்:பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நம்பிக்கை துளிர்விடும்நாள்.








கும்பம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சிலநுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.







                                        
மீனம்:குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைகண்டறிவீர்கள். அக்கம் பக்கம்வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
Comments