09.01.18- இன்றைய ராசி பலன்..(09.01.2018)

posted Jan 8, 2018, 5:17 PM by Habithas Nadaraja   [ updated Jan 8, 2018, 5:18 PM ]
மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அதிகாரப் பதவி யில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.ரிஷபம்:புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார் கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். புதுமை படைக்கும் நாள்.மிதுனம்: சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். தாய் வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். கடகம்:குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங் கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள். சிம்மம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். முகப்பொலிவுக் கூடும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.கன்னி:இரவு 7.13 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப் பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங் கடத்திற்கு ஆளாக்குவார்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபா ரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப் புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


துலாம்:கணவன்-மனைவிக் குள் வாக்குவாதம் வந்து போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உறவினர்களால் சங்கடங் கள் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். இரவு 7.13 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள். விருச்சிகம்:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.தனுசு:உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபா ரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள் வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். மகரம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். கும்பம்:இரவு 7.13 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

                                        

மீனம்:மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்து வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும. மனைவிவழியில் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இரவு 7.13 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கு வதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.
Comments