09.01.19- இன்றைய ராசி பலன்..(09.01.2019)

posted Jan 8, 2019, 5:32 PM by Habithas Nadarajaமேஷம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.     ரிஷபம்:உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி  உயர்வதற் கானவழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.  பிரபலங் களால்ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பழையவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள். மிதுனம்:காலை 11.30 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலை கள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிம்மதி கிட்டும் நாள்.   கடகம்: காலை 11.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர் களை முழுமையாக நம்பிக்கொண்டிருக்க வேண்டாம். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.  


சிம்மம்: எதையும் தன்னம் பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில்புது வாடிக்கையாளர்கள் அறிமுகமா வார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். எதிர் பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.  கன்னி: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவரு வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர் களின் உதவியை நாடுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலித மாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.  


துலாம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டா ரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள். விருச்சிகம்: எதிர்ப்புகளையும்  தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் கருத்துமோதல்கள் வந்துச் செல்லும்.வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கடினமாக உழைக்க வேண்டிய நாள். தனுசு: துணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசாங்கத்தாலும்,அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும்ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள். 


மகரம்:காலை 11.30 மணிவரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் டென்ஷன் இருக்கும். பிற்பகல் முதல் மனஉளைச்சல் நீங்கிஎதிலும் ஒரு தெளிவு பிறக்கும். உடல் நிலை சீராகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள்.வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள். 


கும்பம்:காலை 11.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர் சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராடவேண்டிவரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.


                                        
மீனம்: அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடு வீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டுநச்சரிப்பார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். அசைவ உணவு களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம்.தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
Comments