[Untitled]‎ > ‎

09.01.22- இன்றைய ராசி பலன்..(09.01.2022)

posted Jan 8, 2022, 8:11 PM by Habithas Nadaraja
  • மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.









































































































  • ரிஷபம்:எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
























































  • .




































  • மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதிக்கும் நாள்.
































































































































  • கடகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் . உற்சாகமான நாள்.


















  • சிம்மம்: சந்திராஷ்டமம்  இருப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும் ‌. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும்.   வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.


























  • கன்னி:  உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.
















































































































  • துலாம்:எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.





























































































  • .

























  • விருச்சிகம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால்  நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.







































  • .





































  •  




























  • தனுசு:பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புதுவேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


























































































  • மகரம்:குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


    .





















































































































  • கும்பம்:கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் உண்டு. முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும் . புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள்.  பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.























































































































  • மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.  உத்தியோகத்தில் அதிகாரிகளால்  அழைக்கப்படுவீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.
Comments