09.06.17- இன்றைய ராசி பலன்..(09.06.2017)

posted Jun 8, 2017, 6:03 PM by Habithas Nadaraja
 மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

ரிஷபம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழி யில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.மிதுனம்: குடும்பத்தில் உங் கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டா ரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியா பாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.கடகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். தாய்வழி உறவினர் களுடன் மனத்தாங்கல் வரும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக் கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.கன்னி: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.துலாம்கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். அழகு, இளமைக் கூடும். வராது என்றிருந்த பணம் வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோ கத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒன்றுக் கும் மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டு பார்க் கக் கூடும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். அடுத்தவர் களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


தனுசு: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர் களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.மகரம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சிறப்பான நாள்.கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.மீனம்: பிரச்னைகளை சமாளிக்கும் மனோ பலம் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்யோகத் தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உற்சாகமான நாள்.

Comments