[Untitled]‎ > ‎

09.07.20- இன்றைய ராசி பலன்..(09.07.2020)

posted Jul 8, 2020, 6:58 PM by Habithas Nadaraja


மேஷம்:தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள்.







 
ரிஷபம்:தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.








மிதுனம்:குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புதிய சிந்தனைகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.








 கடகம்:சந்திராஷ்டமம் இருப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.








சிம்மம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நன்மை கிட்டும் நாள்.








கன்னி:
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித்தருவார். அதிர்ஷ்டமான நாள்.








துலாம்:புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.








விருச்சிகம்:எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.








தனுசு:குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.








மகரம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் ஒரு புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.








கும்பம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.






                                        
மீனம்:குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.
Comments