மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. முன் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். ரிஷபம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. பயணங்களால் பயனடைவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அறிவுப்பூர்வமாக பேசி எல்லோரையும் கவருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள். கடகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள். சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளால் நிம்மதி கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தி யாகும் நாள். கன்னி: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள். துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். உற்சாகமான நாள். விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். தனுசு: தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் எடுத்தெரிந்து பேச வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். போராடி வெல்லும் நாள். மகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். சிறப்பான நாள். கும்பம்: சாதித்துவிடுவோம் என்ற ஒரு நம்பிக்கை பிறக்கும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். முயற்சிகள் பலிதமாகும் நாள். மீனம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். |
கலாச்சாரம் >