மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிர பலங்கள் அறிமுக மாவார்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோக மான நாள்.
ரிஷபம்:குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படு வீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.
மிதுனம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒரு வரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை கிடைக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உழைப் பால் உயரும் நாள்
கடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப் பார்கள். அரசாங்கத் தாலும், அதிகாரப் பதவியில் இருப் பவர்களாலும் ஆதாயம் உண்டு. வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.
சிம்மம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் நலம் சீராகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
கன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந் தெரியாத சின்ன சின்ன கவலைகள்வந்து போகும். உங்கள் மீதுசிலர் வீண் பழிசுமத்த முயற்சிப்பாவர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில்சக ஊழியர்களை குறை றிக்கொண்டிருக்க வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும்.அநாவசிய செலவுகளை தவிர்க்கப்பாருங் கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.
விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும்.சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் ரசனையை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேதிகாரி பாராட்டுவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.
தனுசு:நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர் கள்ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். திடீர் முடிவுகள் எடுப் பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பர். சாதிக்கும் நாள்.
மகரம்:கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். உற்சா கமான நாள்.
கும்பம்:சந்திராஷ்டமம் தொடர் வதால் உணர்ச்சி வசப்படா மல்அறிவுப்பூர்வமாக முடி வெடுக் கப்பாருங்கள். உங்கள் திறமையை சிலர் குறைத்து மதிப் பிடுவார்கள். வியாபாரத்தில் வேலை யாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக் கப்பாருங்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.
மீனம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.