09.11.18- இன்றைய ராசி பலன்..(09.11.2018)

posted Nov 8, 2018, 6:13 PM by Habithas Nadarajaமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர் கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராடவேண்டியிருக்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.  சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம்:தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள்.சகோதர வகையில் நன்மைஉண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிக்கப் படுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.  மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள். 

கடகம்:  வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும்.வெளிவட் டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ஆன்மிக  நாட்டம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.  சிம்மம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி கரமான சூழ்நிலை உருவாகும். எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். கன்னி: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள்.வியாபாரத்தில்சில நுணுக்கங்களைகற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சவாலான  வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.துலாம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வராது என்றி ருந்த பணம் கைக்கு வரும்.விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.  உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். உற்சாகமான நாள்.    விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில்எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக் கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


தனுசு:மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். மற்றவர்களை சார்ந்துஇருக்க வேண்டாம். வாகனம்அடிக்கடி தொந்தரவு தரும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். 


மகரம்:சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.  எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.கும்பம்:கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கானவழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர்  உங்களைநம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வியாபாரத்தில் போட்டி களை எதிர்
கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சாதிக்கும் நாள். 


                                        
மீனம்:குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பணப் புழக்கம்  கணிசமாக உயரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
.
Comments