மேஷம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள்.
ரிஷபம்:சந்திராஷ்டமம் நீடிப் பதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமை யில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.
மிதுனம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும்.கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். புதிய வரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபா ரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.
கடகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். விருந்தினர்களின் வருகையால்வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தொட்டது துலங்கும் நாள்.
சிம்மம்:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூ பத்தைபுரிந்துக் கொள்வீர் கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.
கன்னி:நட்பு வட்டம் விரியும்.நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப் பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.உழைப்பால் உயரும் நாள்.
துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துபிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்று
வீர்கள். உத்யோகத்தில்அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.
விருச்சிகம்:இங்கிதமாகப் பேசி கடினமான காரியங் களையும் சாதிப்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். புதியயோசனைகள் பிறக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
தனுசு:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷனாவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
மகரம்: குடும்பத்தினருடன் வீண் விவாதம் வந்துப் போகும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடைய லாம்.உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில்பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.உத்யோகத்தில் மறைமுக நெருக்கடி வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
கும்பம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நெடு நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பழைய கடனில்ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். புகழ், கௌரவம் உயரும் நாள்.
மீனம்:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். புதுத் தொழில்தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.